தளபதி விஜய் நடித்துள்ள புதிய படமான 'பிகில்' தீபாவளி ட்ரீட்டாக வரவுள்ளது. இந்தப் படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.
மாநகரம் படப்புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் இந்தப் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தில் அவரது தங்கையாக நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி, சாந்தனு, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்கின்றனர்.