கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா, சோனல் சௌகான், வேதிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் #NBK105. இதற்கு ‘Ruler' என்ற பெயர் வைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிவரும் இப்படத்தின் தசரா வாழ்த்து போஸ்டர் ஒன்று ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இது படக்குழுவினரால் வெளியிடப்பட்டதா என்று தெரியவில்லை.
பாலகிருஷ்ணாவின் தசரா போஸ்டரால் குழப்பம்! - பாலகிருஷ்ணா
பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகிவரும் #NBK105 திரைப்படத்தின் தசாரா வாழ்த்து போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
NBK 105
இந்த படம் குறித்து ட்வீட்களை எல்லாம் ரீ-ட்வீட் செய்து வந்த கதாநாயகி சோனல் சௌகான், இதுகுறித்து எந்த ட்வீட்டும் செய்யவில்லை. ரசிகர்களுக்கு தசரா வாழ்த்து சொல்லும் பொருட்டு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்போஸ்டரில் பாலகிருஷ்ணா ரத்தக்கரையான அரிவாளுடன் நிற்கிறார். டிசைனிங் மோசமாக உள்ளது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதையும் வாசிங்க:#Blasphemy - ஏஞ்சலினா ஜோலி போல் மாற நினைத்த இன்ஸ்டா பிரபலம் கைது!