தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அடுத்து என்ன லுக்..? சஸ்பென்ஸை கட்டவிழ்க்கும் ஜெயம்ரவி - இயக்குநர் லக்ஷ்மண்

வித்தியாசமான கதாபாத்திரங்கள், தோற்றங்களில் நடித்து அடுத்தடுத்து ஹிட் கொடுத்து தனது கேரியர் கிராஃப்பை உயரத்துக்கு எடுத்துச் சொன்றுள்ளார் ஜெயம் ரவி. ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸாக தனது 25ஆவது படத்தின் லுக்கை வெளியிடவுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி

By

Published : Oct 9, 2019, 1:11 PM IST

சென்னை: எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என்று ஜெயம் ரவியின் 25ஆவது படத்தின் டைட்டில் லுக் குறித்த எதிர்பார்ப்பை படக்குழுவினர் ஏற்படுத்தியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. காதல், செண்டிமெண்ட், காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக இருந்த இந்தப் படத்தை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு ரசிகர்களும் கொண்டாடினர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது 25ஆவது படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. #JR25 என்று அழைக்கப்படும் இப்படத்தின் டைட்டில் லுக்கை, வரும் 11ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என்று டைட்டில் லுக் குறித்து குறிப்பிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

ஜெயம் ரவி 25வது படம்

#JR25 படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை நித்தி அகர்வால் நடிக்கிறார். ஜெயம் ரவிக்கு ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்த லக்ஷ்மண் இயக்குகிறார். டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை, ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details