தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் யுவன் ஷங்கர் ராஜாவும் ஒருவர். ஏறத்தாழ 130 படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் யுவனின் பாடல்களை பகிர்ந்து கொண்டாடிவருகின்றனர்.
ட்விட்டரில் களைகட்டும் யுவன் பிறந்தநாள் - #HBDYuvan
சென்னை: இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDYuvan, #HappyBirthdayYuvan என்ற இரு ஹாஷ்டாக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளன.
yuvan shankar
இந்நிலையில், #HBDYuvan, #HappyBirthdayYuvan என்ற இரண்டு ஹாஷ்டாக்குகள் ட்விட்டரில் இந்திய அளவிலான ட்ரெண்டங்கில் இடம்பிடித்துள்ளன. மேலும், யுவனின் புகைப்படத்தை அவர்கள் காமன் டிபியாகவும் வைத்துவருகின்றனர்.