தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆஹா அலப்பறைய ஆரம்பிச்சுட்டாய்ங்கப்பா... இந்திய அளவில் ட்ரெண்டாகும் #BigilTrailerDay ஹேஸ்டேக் - Bigil vijay latest

விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள 'பிகில்' படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #BigilTrailerDay என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கியுள்ளனர்.

bigil

By

Published : Oct 12, 2019, 8:46 AM IST

Updated : Oct 12, 2019, 11:52 AM IST

விஜய் - இயக்குநர் அட்லி ஆகியோர், 'தெறி', 'மெர்சல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் 'பிகில்'. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், விவேக், யோகி பாபு, கதிர், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிகில் பட போஸ்டர்

இந்தப் படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்துவந்தது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் வெறித்தனம் என்னும் பாடலை விஜய் பாடியும் உள்ளார். தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டிருந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் இன்று (அக். 12) வெளியாகும் என்று கடந்த ஏழாம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்திய அளவில் ட்ரெண்டாகும் 'பிகில்'

இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் இன்று காலை முதலே #BigilTrailerDay என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கத் தொடங்கிவிட்டனர். இந்த ஹேஸ்டேக் தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. வெளியாவதற்கே இவ்வளவு அலப்பறைனா... வெளியான பின் விஜய் ரசிகர்களுக்கு சொல்லவா வேணும்....

Last Updated : Oct 12, 2019, 11:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details