நடிகர் விஜய்-இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகி பாபு என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மெர்சல் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை படக்குழு செய்துவரும் நிலையில், #bigil என் ட்வீட் செய்தால் விஜய் கையில் ஃபுட்பாலுடன் இருப்பது போன்ற எமோஜி வருகிறது. விஜய்யும் தனது ட்விட்டரில் பிகில் என ட்வீட் செய்துள்ளார்.
இதனை ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு, இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர். #PodraVediya, #தளபதி63, #வெறித்தனம், #BigilEmoji உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளும், எமோஜியுடன் வலம் வருகின்றன.