தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#AV30: அத்தனை தழும்புகளும் ஒரு கதை சொல்லும் - காயம்பட்ட அருண் விஜய் - #AV30

#AV30 படப்பிடிப்பு தளத்தில் காயமடைந்த அருண் விஜய், அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Arun vijay

By

Published : Sep 26, 2019, 12:35 PM IST

Updated : Sep 26, 2019, 1:12 PM IST

நீண்டகாலமாக தமிழ் சினிமாவில் பணியாற்றிவரும் அருண் விஜய், ‘தடையறத் தாக்க’ படத்தின் மூலம் கவனம் பெற்றார். அதன்பிறகு அஜித்துடன் இணைந்து நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் அவரை வேறு தளத்துக்குக் கொண்டு சென்றது.

’குற்றம் 23’, ‘தடம்’ என மாஸ் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்தவர், தற்போது குமரவேலன் இயக்கும் #AV30 (அருண் விஜய்யின் 30ஆவது படம்) படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படப்பிடிப்பு தளத்தில் காயம்பட்ட அருண் விஜய், இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Arun vijay in mafia

அதில், “பணி செய்யும்போது காயம்பட்டால் எனக்கு வலி தெரியாது, இது நான் நேசித்து ஏற்றுக்கொண்ட பயணம். அத்தனை தழும்புகளும் ஒரு கதை சொல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.

#AV30 திரைப்படம் கிரைம் திரில்லராக உருவாகிவருகிறது. ‘வாகா’, ‘ஹரிதாஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய குமரவேலன் இயக்கும் இப்படத்தை, மூவிங் ஸ்லைட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷின் ‘குப்பத்து ராஜா’ படத்தில் நடித்த பலக் லால்வானி இதில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுபோக கார்த்திக் நரேனின் ‘மாஃபியா’ (Mafia), விவேக் இயக்கும் ‘பாக்ஸர்’ ஆகிய படங்களும் அருண் விஜய் வசம் உள்ளன.

இதையும் வாசிங்க: அவமானங்கள் தந்த வெற்றி: ஷூட்டிங் பாட்டிகளின் வரலாறு #SaandKiAankhTrailer

Last Updated : Sep 26, 2019, 1:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details