சென்னை:தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'தேவி நேனி' என்ற திரைப்படம் தமிழில் ‘மதுரை சிங்கம்’ என்ற பெயரில் வெளியாகிறது.
சாதி, மதம், வகுப்புவாதம் தலைதூக்குகிறது. இதை பயன்படுத்தி சில வன்முறையாளர்கள் மாணவர்களை மிரட்டி பணம் பறிப்பதும், அவர்களை தவறான செயல்களுக்காகவும் அரசியல் லாபங்களுக்காகவும் பயன்படுத்தும் போக்கும் உள்ளது.
இதை எதிர்க்கும் கதையின் நாயகன் சிம்ஹா, வன்முறையாளர்களை அடித்து துவம்சம் செய்கிறான். மாணவர்களை ஒருங்கிணைத்து, வன்முறையின் பின்னணியில் இருக்கும் பல்வேறு முடிச்சுகளை அவிழ்க்கிறான். இதுதான் மதுரை சிங்கம் திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.
'தேவி நேனி' என்ற பெயரில் தெலுங்கில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், தமிழில் டப் செய்யப்பட்டு தற்போது ‘மதுரை சிங்கம்’ என்ற பெயரில் வெளியாகிறது.