2009-ம் ஆண்டு டைட்டானிக் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான படம் அவதார். இப்படம் உலகளவில் ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.
அடுத்த பிரமாண்டத்துக்கு தயாராகும் ஹாலிவுட்: அவதார் 2 வெளியாகும் தேதி அறிவிப்பு!
அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் தேதி குறித்த தகவலை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
Poster
இந்த படத்தின் அடுத்த இரண்டு பாகங்களை இயக்க உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் சில வருடங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்நிலையில் அவதார் 2 2021 டிசம்பர் 17-ம் தேதி வெளியாகும் என படக்குழுவால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் அடுத்த அடுத்த பாகங்கள் `அவதார் 3' 2023ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, `அவதார் 4' டிசம்பர் 19ம் தேதி 2025ம் ஆண்டிலும் `அவதார் 5' டிசம்பர் 17ம் தேதி 2027ம் ஆண்டிலும் முறையே வெளிவரும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.