கரோனா பரவல் காரணமாக தற்போது பெரும்பாலான படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. அந்த வரிசையில் தற்போது, ‘நவம்பர் ஸ்டோரி' வெப் சீரிஸ் இணைந்துள்ளது.
ஒடிடி தளத்தில் வெளியாகும் நவம்பர் ஸ்டோரி - நவம்பர் ஸ்டோரி
சென்னை: நடிகை தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘நவம்பர் ஸ்டோரி' வெப் சீரிஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
![ஒடிடி தளத்தில் வெளியாகும் நவம்பர் ஸ்டோரி நவம்பர் ஸ்டோரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11681166-thumbnail-3x2-tamnah.jpg)
நவம்பர் ஸ்டோரி
இதில் தமன்னா, ஜி.எம்.குமார், விவேக் பிரசன்னா, அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடரில் தமன்னா ஹேக்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ’நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸ் வரும் 20ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : May 8, 2021, 7:20 AM IST