தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நூறு கோடி வானவில் மோஷன் போஸ்டர் வெளியீடு - harish kalyan upcoming movies

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் நூறு கோடி வானவில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நூறு கோடி வானவில்
நூறு கோடி வானவில்

By

Published : Jan 12, 2022, 6:16 PM IST

ரோஜா கூட்டம், பூ, சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களை வெற்றிப்படங்களை இயக்கியவர் சசி. இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கிவருகிறார்.

ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு நாயகி சித்தி இத்னானி நடிக்கிறார். சிவப்பு மஞ்சள் பச்சை பட இசையமைப்பாளர் சித்து குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நூறு கோடி வானவில் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதை இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, நடிகர் சித்தார்த் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர். முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகிவருகிறது.

மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் நாளன்று வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதுதவிர சண்முகம் முத்துசுவாமி இயக்கிவரும் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க:அமீர் இயக்கத்தில் நடிக்கும் சூரி

ABOUT THE AUTHOR

...view details