தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நோ டைம் டூ டை': ஜேம்ஸ் பாண்டை எதிர்க்கும் ரமி மாலெக்! - rami malek james bond film

'நோ டைம் டூ டை' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ரமி மாலெக் நடித்துள்ளார்.

நோ டைம் டூ டை
நோ டைம் டூ டை

By

Published : Sep 15, 2020, 4:09 PM IST

ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் சீரிஸில் 25ஆவது படமான 'நோ டைம் டூ டை' திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்டாக ஐந்தாவது முறையாக டேனியல் க்ரேய்க் நடித்துள்ளார்.

இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் நேற்று (செப்.14) ஜேம்ஸ் பாண்டின் யூ-ட்யூப் பக்கத்திலிருந்து காணொலி ஒன்றைப் படக்குழு வெளியிட்டது.

அந்தக் காணொலியில் படத்தின் வில்லன் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆஸ்கர் விருதுபெற்ற ரமி மாலெக், ‘சஃபின்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது குறித்து அவர் காணொலியில், "சஃபின் கதாபாத்திரம் என்னை ஒரு ஹீரோவாக நினைக்கவைத்தது. சஃபின் ஒரு வல்லமையான எதிரி. அதற்கு ஏற்றார்போல் ஜேம்ஸ் பாண்டும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இத்திரைப்படம் இங்கிலாந்தில் நவம்பர் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details