இதுகுறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது,
'தீபாவளி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுப்பு; புக் செய்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம்'
தூத்துக்குடி: 'பிகில்' மற்றும் எந்த புதிய படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் சிறப்புக் காட்சிகளுக்கு வசூலிக்கப்பட்டால் உரியவர்களுக்கு உரிய பணத்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
'பிகில்' மற்றும் எந்த புதிய படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை. ஊடகங்கள்தான் 'பிகில்' படத்தை மட்டும் முன்னிலைப் படுத்தியுள்ளது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விடுமுறை காலங்களில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக சிறப்பு காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் இதை தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக விமர்சனம் வந்தது. அதனால் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் முதல் காட்சியை காண்பதற்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளதால் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறப்புக் காட்சிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளார்கள். ஏற்கனவே சிறப்புக் காட்சிகளுக்கு வசூலிக்கப்பட்டால் உரியவர்களுக்கு உரிய பணத்தை வழங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். பெரும்பாலும் முன்பதிவு செய்பவர்கள் ஆன்லைனில்தான் செய்வார்கள். ஆகவே அவர்கள் பணத்தை எளிதில் பெறலாம் என்றார்.