தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ராதே ஷ்யாம் ரிலீஸ் தள்ளிபோகிறதா? - படக்குழு விளக்கம் - ராதே ஷ்யாம் ரிலீஸ் தேதி

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் அறிவித்த தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

RRR
RRR

By

Published : Jan 2, 2022, 8:12 PM IST

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாயுள்ள படம் 'ராதே ஷ்யாம்'. முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி தயாராகியுள்ள இதில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

மாபெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இத்தாலி, ஜார்ஜியா, பாரீஸ் உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. உலக அளவில் 7 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகவிருப்பதாகப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், அதற்குள் ஒமைக்ரான் பரவல் காரணமாக 50% மட்டுமே பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட சில மாநிலங்களில் உத்தரவு போடப்பட்டுள்ளது.

அதனால் திட்டமிட்ட தேதியில் 'ராதே ஷ்யாம்' வெளியாகாது என வதந்தி பரவிவந்தது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான, யுவி கிரியேஷன்ஸ், "ராதே ஷ்யாமின் வெளியீட்டுத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. பிரபாஸ் நடித்துள்ள இப்படம் ஜனவரி 14ஆம் தேதி திரைக்கு வரத் தயாராகி வருகிறது.
வதந்திகளை நம்ப வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:SK 20 Update: தெலுங்கில் கால்பதிக்கும் சிவகார்த்திகேயன்

ABOUT THE AUTHOR

...view details