தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மூத்தோன்' ட்ரெய்லர் - நிவின்பாலி வேறலெவல்! - மூத்தோன் ட்ரெய்லர்

படம் வெளியாகும் முன்னே பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்த மூத்தோன் மலையாள சினிமாவிற்கு ஒரு மைல்கல். அண்ணனை தேடும் ஒரு தம்பியின் கதையை த்ரில்லர் ஜானரில் 'மூத்தோன்' என்ற பெயரில் இயக்கியிருக்கிறார் கீது மோகன்தாஸ்.

Moothon

By

Published : Oct 11, 2019, 5:34 PM IST

நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள மூத்தோன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

தேசிய விருதுபெற்ற ‘லையர்ஸ் டைஸ்’ படத்தை இயக்கிய கீது மோகன்தாஸின் அடுத்த படைப்பு ‘மூத்தோன்’. இதில் நிவின் பாலி, சசங் அரோரா, சோபிதா துலிபலா, மெலிசா ராஜு தாமஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 5 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்ற டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘மூத்தோன்’ படம் திரையிடப்பட்டது. இதற்காக படக்குழுவினர் அங்கு சென்றிருந்தனர். இத்திரைப்படம் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மலையாளம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தியில் அனுராக் கஷ்யப் இதற்கு வசனம் எழுதியுள்ளார்.

இதன் டீசர் ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

லட்சத்தீவில் இருந்து தனது அண்ணனை தேடி மும்பை வரும் தம்பியின் கதையை கூறும் கீது மோகன்தாஸின் ‘மூத்தோன்’, வரும் நவம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் வாசிங்க: டொரன்டோவில் திரையிடப்பட்ட ‘மூத்தோன்’ வெளியாகும் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details