'அமைதிப்படை-2', 'கங்காரு', 'மிக மிக அவசரம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி தற்போது, 'மாநாடு' படத்தைப் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார். இதனையடுத்து அவர் 'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்' உள்ளிட்ட ஆத்மார்த்தமான படங்களை இயக்கிய, இயக்குநர் ராம் படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதல் முறையாக ராம் இயக்கத்தில் நடிக்கும் நிவின் பாலி
இயக்குநர் ராம் இயக்கும் புதிய படத்தில் நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நிவின் பாலி
நிவின் பாலி நடிக்கும் இதில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். சூரி முக்கிய வேடத்தில் நடிக்க யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:மாணவியின் படிப்புச் செலவுக்காகப் பாடல் பாடிய ஜி.வி. பிரகாஷ்