தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிங்க் தெலுங்கு ரீமேக்கில் இணைந்த ஆதித்யா அருணாச்சலத்தின் மகள் - பிங்க் தெலுங்கு ரீமேக்

பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிங்க் தெலுங்கு ரீமேக்கில் இணைந்த ஆதித்யா அருணாச்சலத்தின் மகள்
பிங்க் தெலுங்கு ரீமேக்கில் இணைந்த ஆதித்யா அருணாச்சலத்தின் மகள்

By

Published : Jan 25, 2020, 3:08 PM IST

Updated : Jan 25, 2020, 3:14 PM IST

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட பிங்க் படத்தை தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தல அஜித் நடித்திருந்த அப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து பிங்க் திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்துவருகிறார். 'லாயர் சாப்' என்று பெயரிட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை நிவேதா தாமஸ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதுதவிர, மேலும் உள்ள இரண்டு பெண்களின் கதாபாத்திரத்தில் அஞ்சலி, அனன்யா நாகல்லா ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிவேதா தாமஸ் கோலிவுட்டில் கடைசியாக, தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க:சமுத்திரக்கனியின் 'நாடோடிகள் 2' பட டீஸர் வெளியீடு!

Last Updated : Jan 25, 2020, 3:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details