'பேட்ட' படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்திற்கு 'தலைவர் 167' என்று தற்காலிகமாக படக்குழுவினரால் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 'சந்திரமுகி', 'குசேலன்' படத்திற்கு பிறகு நயன்தாரா, ரஜினியுடன் மூன்றாவது முறையாக இணைகிறார்.
ரஜினியின் புதிய படத்தில் நடிக்கும் கமல் மகள்!
ஏ.ஆர்.முருகதாஸ்-ரஜினி இணையும் புதிய படத்தில் மலையாள நடிகை நிவேதா தாமஸ், ரஜினியின் மகள் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, ‘தலைவர் 167’ படத்தில் ரஜினியின் மகளாக மலையாள நடிகை நிவேதா தாமஸ் நடிக்கிறார். இவர் பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தார். அப்படத்தில் மகள் கேரக்டர் சுற்றியே திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்ததால், நிவேதா தாமஸின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. கமலைத் தொடர்ந்து தமிழில் உச்ச நட்சத்திரமான ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் பெண்களின் கேரக்டர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். அதனால், நிவேதா தாமஸின் கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.