நிதிஷ் வீரா, 'பேரரசு', 'சிந்தனை செய்' உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதன்பின்னர் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'அசுரன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார். இதன் மூலம் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மறைந்த இயக்குநர் எஸ். பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் 'லாபம்' படத்தில் நிதிஷ் நடித்திருந்தார்.