யோகி பாபு, வருண் நடிப்பில் தயாராகிவருவது ’பப்பி’ படம். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டார். அந்த போஸ்டரில் ஒரு பக்கத்தில் நித்யானந்தாவின் படமும், இன்னொரு பக்கத்தில் ஜானி சின்ஸ் என்ற பார்ன் ஸ்டாரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
’பப்பி’ டீமுக்கு நித்யானந்தா லீகல் நோட்டீஸ் - Nithyanandha Legal Notice
’பப்பி’ படம் போஸ்டரிலிருந்து நித்யானந்தா தனது படத்தை நீக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
![’பப்பி’ டீமுக்கு நித்யானந்தா லீகல் நோட்டீஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4265441-19-4265441-1566974817459.jpg)
பப்பி டீமுக்கு நித்யானந்தா லீகல் நோட்டீஸ்
இதனையடுத்து படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிவசேனா கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நித்தியானந்தா சார்பில் பப்பி டீமுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ’உலக புகழ் பெற்ற ஆன்மீகவாதியுடன் ஒரு பார்ன் ஸ்டாரை சேர்த்து சீப் பப்ளிசிட்டி செய்வது தவறு எனவே உடனடியாக எனது படத்தை நீக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.