தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மிஷ்கின் என்னைக் குழந்தைப்போல பார்த்துக் கொண்டார்' - நித்யா மேனன் - நித்யா மேனன்

இயக்குநர் மிஷ்கின் தன்னை ஒரு குழந்தைப்போல பெற்றுக்கொண்டதாக நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

'மிஷ்கின் என்னை குழந்தை போல பார்த்துக் கொண்டார்' -நித்யா மேனன்
'மிஷ்கின் என்னை குழந்தை போல பார்த்துக் கொண்டார்' -நித்யா மேனன்

By

Published : Feb 1, 2020, 12:16 PM IST

உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று திரையரங்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.

இதையடுத்து இதைக் கொண்டாடும்விதமாக, சைக்கோ படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகை நித்யா மேனன், "சைக்கோ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன். நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் படம் என்றாலே பிடிக்கும்.

பணத்தை வீணடிக்காமல் நல்ல படங்களை எடுப்பது எனக்குப் பிடிக்கும். மிஷ்கின் நேர்மையான இயக்குநர், இதுபோன்ற இயக்குநர்களின் கதையில் நடிப்பது நடிப்பவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

'மிஷ்கின் என்னைக் குழந்தைப்போல பார்த்துக் கொண்டார்' -நித்யா மேனன்

சைக்கோ படத்தில் எனது கதாபாத்திரம் பிடித்தது, ஆனால் சில கெட்ட வார்த்தைகளைப் பேச வேண்டியிருந்தது. அவற்றை என் வாழ்க்கையில் நான் பேசியதே இல்லை. பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலேயே பேசியிருந்தேன். பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. மிஷ்கின் மீதான நம்பிக்கையால், இந்தப் படத்தில் நடித்தேன். அவர் என்னைக் குழந்தைப்போல பார்த்துக் கொண்டார். என்னை பாப்பா என்றுதான் அழைப்பார்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'சாதியைச் சொல்லி படம் எடுப்பவர்களை செருப்பால் அடிப்பேன்' - இயக்குநர் தருண் கோபி

ABOUT THE AUTHOR

...view details