தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

HBD நிதின் சத்யா! - satham podathe nithin sathya

பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்ற நிதின் சத்யா இன்று (ஜன.9) தனது 42ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

HBD நிதின் சத்யா!
HBD நிதின் சத்யா!

By

Published : Jan 9, 2022, 7:05 AM IST

சென்னை: கடந்த 2004ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "வசூல்ராஜா எம்பிபிஎஸ்" திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக, முதன்முதலாக மக்களின் கவனத்தைப் பெற்றவர் நிதின் சத்யா. இவர், லண்டனில் வணிக நிர்வாக முதுகலை பட்டம் பெற்றவர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான "சென்னை 600028" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தமைக்காக நிதின் சத்யா விமர்சன் ரீதியாகவும் வரவேற்பை பெற்றார். அத்துடன் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான "சத்தம் போடாதே" திரைப்படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக பலரது பாராட்டையும் பெற்றார்.

தற்போது சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான "அரண்மனை" திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் களமிறங்கி அசத்தினார்.

இந்நிலையில் நடிகர் நிதின் சத்யா இன்று (ஜன.9) தனது 42ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் #HpyBdayNithinSathya எனும் ஹாஸ்டேக் மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:உணவுக்கு வழியில்லாமல் அவதிப்படும் நடிகை ரங்கம்மாள் பாட்டி

ABOUT THE AUTHOR

...view details