சமீபத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், சோனிலிவ் தளத்தில் வெளியிட்ட 'பன்றிக்கு நன்றி சொல்லி' திரைப்படமானது, அதன் வித்தியாசமான கதையம்சத்திற்காக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாலா அரன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் சினிமா இயக்குநராகப் போராடும் கதாபாத்திரத்தில் நிஷாந்த் ரூஸோ நடித்துள்ளார்.
கூத்துப்பட்டறையில் நடிப்புப்பயிற்சி எடுத்துக்கொண்ட நிஷாந்த் ரூஸோ, 2018ஆம் ஆண்டு 'ஆண்டனி' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் சண்டக்கோழி வில்லன் நடிகர் லாலுக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பு, அவருக்கு கிடைத்தது.
அப்போது படப்பிடிப்பு நடந்த சமயத்திலேயே, 'பன்றிக்கு நன்றி சொல்லி' படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
பிக்பாக்கெட் என சந்தேகம்
இதுகுறித்து அவர் பேசுகையில், 'இந்தப் படத்தின் பல காட்சிகளை யாரும் அறியாதவண்ணம் படமாக்கினோம். கோவையில் நள்ளிரவில் பிக்பாக்கெட் திருட்டு ஒன்றை படமாக்கினோம்.
அப்போது இயக்குநர் 'கட்' சொன்னது கூட கேட்காமல், நானும், உடன் நடித்தவரும் சற்று தூரம் தள்ளி வந்துவிட்டோம்.
வழியில் எங்களை நிறுத்திய காவலர்கள் எனது கிழிந்த உடை, உடன் நடித்தவரின் முகத்தைப் பார்த்து சந்தேகப்பட்டு, ஜீப்பில் ஏற்றும் அளவுக்குத் தயாராகி விட்டார்கள். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு அனுமதி கடிதத்தை காட்டிய பின்னரே அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.