நடிகை அனுஷ்கா நடிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நிசப்தம்’. த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இதில் அனுஷ்காவுடன மாதவன் நடித்துள்ளார். அவர்களுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
கரோனா அச்சம்: ’நிசப்தம்' வெளியாகும் தேதி ஒத்திவைப்பு!
அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ’நிசப்தம்' படம் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரோனா ஆச்சம்: ’நிசப்தம்' வெளியாகும் தேதி ஒத்திவைப்பு!
இந்நிலையில் ‘நிசப்தம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸ் மிரட்டி வருவதால் படத்தின் ரீலிஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் விரைவில் படத்தின் புதிய ரீலிஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:தனிமையை அறிமுகப்படுத்தியது எங்க கே.எஸ். ரவிக்குமார்: கரோனாவுக்கே கலாய் மீம்ஸ்