தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

செட் இல்லாமல் உருவானது 'நிசப்தம்' - ஹேமந்த் மதுகர் - அமேசான் ப்ரைமில் வெளியாகும் நிசப்தம்

சென்னை: அமெரிக்கா, சியாட்டலின் புறநகரில் செட் ஏதும் அமைக்காமல் உண்மையான தளங்களில் வைத்து நிசப்தம் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஹேமந்த்
ஹேமந்த்

By

Published : Sep 25, 2020, 3:03 PM IST

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'பாகமதி' படத்திற்குப் பின் திரையுலகிலிருந்து விலகியிருந்த அனுஷ்கா தற்போது ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ‘நிசப்தம்’ எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அவர் நடிகர் மாதவனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை பீப்புள் மீடியா ஃபேக்டரி - கோனா ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்து. ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருந்த படம் கரோனா அச்சம் காரணமாக வெளியாகவில்லை.

இதனையடுத்து இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் குறித்து படத்தின் இயக்குநர் ஹேமந்த் மதுகர் கூறுகையில்,

"செவித்திறன் குறைபாடுடைய, வாய் பேச முடியாத திறைமையான கலைஞரான சாக்ஷி, எதிர்பாராதவிதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வீட்டில் நிகழும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் கதை கடைசிவரை யூகிக்க முடியாத திருப்பங்களுடன், இருக்கையின் நுனிக்கே வரைவழைக்கும் ஒரு த்ரில்லர் படமாக நிசப்தம் இருக்கும்.

இந்த் படம் முழுக்க வாஷிங்டன் சியாட்டில் நகர பின்னணியில் செட் எதுவும் அமைக்கப்படாமல் 56 நாள்களில் படமாக்கப்பட்டது.

முழு படமுமே அமெரிக்கா, சியாட்டலின் புறநகரில் உள்ள உண்மையான இடங்களில் எந்த செட்டும் அமைக்கப்படாமல் படமாக்கப்பட்டது.

படத்தில் உள்ள சில காட்சிகளில் வரும் காவல் துறையினர்கூட படத்தின் படப்பிடிப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான காவலர்கள்தான். முழு படத்தையும் ஒரே நேரத்தில் 56 நாள்களில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் படமாக்கினோம்.

நிசப்தம் இன்னும் ஐந்து நாள்களில் அமேசான் பிரைம் இல் வெளியாக உள்ளது. தெலுங்கில் நிசப்தம் என்ற பெயரிலும் மற்ற மொழிகளில் சைலன்ஸ் என்ற பெயரில் ஸ்டிரீம் செய்யப்படவுள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details