தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நினைவெல்லாம் ஞானியே - பிரமிக்க வைக்கும் இளையராஜாவின் பயணம் - இளையராஜா

சென்னை: நினைவெல்லாம் நீயடா என்ற திரைப்படம் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் 1417ஆவது திரைப்படமாக உருவாகிறது.

ராஜா
ராஜா

By

Published : Sep 22, 2021, 7:03 PM IST

இந்தியாவில் இசைஞானி இளையராஜாவின் இசைக்கு தனியிடம் உண்டு. 1976ஆம் ஆண்டு அன்னக்கிளியில் ஆரம்பித்த அவரது இசை பயணம் 45 வருடங்களாக இப்போதுரை 1000 படங்களுக்கும் மேலாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி என பலமொழிகளில் அவர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் அவரது இசையில் உருவாகும் 1417ஆவது படமாக ’நினைவெல்லாம் நீயடா’ என்கிற படம் உருவாகிறது. சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இயக்குகிறார்.

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்தப் படத்தின் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க, மற்றொரு நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார்.

இவர்கள் தவிர முக்கிய வேடத்தில் அப்பா படத்தில் நடித்த யுவலஷ்மி நடிக்கிறார். அவருடன் தோழியாக மூக்குத்தி அம்மன் புகழ் அபிநயஸ்ரீயும் நடிக்கிறார். மேலும் மனோபாலா, காளி வெங்கட், மதுமிதா, ரஞ்சன்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் ஆதிராஜன், “காதலைக் கொண்டாடிய அழகி, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், 96 பட வரிசையில் முதல் காதலை மறக்க முடியாமல் தவிக்கும் காதலர்களை பற்றிய இளமை துள்ளும் கதையாக இந்தப்படம் உருவாகிறது. குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் உருகாத இதயங்களையும் உருக வைத்துவிடும். தற்போது படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details