தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சாக்லேட் கேக் செய்து அசத்திய நிதி அகர்வால் - quarantine time

ஹைதராபாத்: கரோனா வைரஸ் காரணமாக வீட்டிலிருக்கும் நிதி அகர்வால் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஓவியம் வரையும் திறமையை வெளிப்படுத்திய நிலையில், தற்போது தனது சமையல் கலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

நிதி அகர்வால்
நிதி அகர்வால்

By

Published : Apr 1, 2020, 10:40 AM IST

நடிகை நிதி அகர்வால் முதல் முறையாக கேக் செய்துள்ள புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் காரணமாக அனைத்து மொழி படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலிருக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட செயல்பாடுகளை ரசிகர்களுக்கும், இணையவாசிகளுக்கும் அறிவிக்கும்விதமாக தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் நடிகை நிதி அகர்வால், வீட்டிலிருக்கும் நேரத்தில் சமையல் செய்யும் வேலையில் இறங்கியுள்ளார். அந்த வகையில் முதல் முறையாகத் தான் கேக் செய்ததாகவும், அது சுவையாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதல் முறையாக நான் கேக் செய்தேன். இதில் சர்க்கரைக்குப் பதிலாக, மேப்பிள் சிரப் கலக்கப்பட்டுள்ளது. முதல் முறை செய்த சாக்லேட் கேக் அருமையாக வந்ததால், இரண்டாவது முறை ஆரஞ்சு கேக் செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நிதி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ள, 'பூமி' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா வைரஸ் - நிதியுதவி வழங்கிய கத்ரீனா கைஃப்

ABOUT THE AUTHOR

...view details