விஜய்யின் ‘தமிழன்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு அவர் தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் பாலிவுட்டின் கரங்கள் அவரை அணைத்துக் கொண்டது. ’ஃபேஷன்’ படத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். ‘பர்ஃபி’, ‘மேரி கோம்’ ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, பாலிவுட்டின் தவிர்க்க முடியாத கதாநாயகி ஆனார்.
நிக்யங்கா வீட்டிற்கு வந்த புது வரவு - பிரியங்கா சோப்ரா குடும்பத்திற்கு வந்த புது வரவு
நிக்யங்கா தம்பதியினரின் வீட்டிற்கு புது வரவாக ஜினோ என்னும் நாய்குட்டி ஒன்று வந்துள்ளது.

அதன்பிறகு, ‘குவான்டிகோ’ எனும் டிவி சீரிஸ் மூலமாக ஹாலிவுட்டில் தடம்பதித்தார். ‘பே வாட்ச்’, ‘ஸ்கை இஸ் பிங்க்’ என அவரது ஹாலிவுட் பயணம் தொடர்கிறது. தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்ற பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் பாப் பாடகர் நிக் ஜோனஸ் மீது காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு ஹாலிவுட் மருமகள் ஆனார். திருமணத்துக்குப் பிறகும் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.
திருமணமாகி ஓராண்டு ஆனநிலையில் பிரியங்கா - நிக் தம்பதிகளுக்கு எப்போது குழந்தை பிறக்கும் என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தனது வீட்டிற்கு புதுவரவாக நாய் குட்டி வந்திருப்பதாக சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தார் பிரியங்கா. மேலும் அந்த நாய்குட்டி மீது தான் மிகுந்த அன்பு வைத்துள்ளதாக கூறிய அவர், நிக்ஜோனுடன் அந்த நாய்குட்டி விளையாடும் வீடியோவையும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த நாய்குட்டிக்கு ஜினோ என்றும் பெயரிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.