தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜுமான்ஜி படத்தின் அடுத்த பாகத்தில் நிக் ஜொனாஸ்! - பிரியங்கா சோப்ரா

ஜுமான்ஜி படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜொனாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நிக் ஜொனாஸ்

By

Published : Feb 7, 2019, 7:51 PM IST

1995-ம் ஆண்டு வெளியாகி ஹாலிவுட் ரசிகர்களிடம் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் ஜுமான்ஜி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'ஜுமான்ஜி : வெல்கம் டூ தி ஜங்கில்' திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இதைதொடர்ந்து வெளியாக உள்ள இதன் மூன்றாம் பாகத்தில் பிரபல பாடகர் நிக் ஜொனாஸ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை திருமணம் செய்து கொண்டதையடுத்து இந்தியாவில் இவர் மிக பிரபலமானார். தற்போது இவர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிபடுத்தி உள்ளார். இந்த படத்தில், இதன் முந்தைய பாகத்தில் நடித்த முன்னணி நட்சத்திரங்களும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details