பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான நிக் ஜோனஸ் - ப்ரியங்கா சோப்ரா இணையின் ஒவ்வொரு பதிவும் சமூகவலைதளங்களில் வைரல் தான். தந்தையர் தினமான நேற்று, அனைவரும் தங்களது தந்தைக்கு வாழ்த்து கூறியும், நினைவு கூர்ந்தும் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.
அதன் ஒரு பகுதியாக ஹாலிவுட் இசையமைப்பாளரும் ப்ரியங்கா சோப்ராவின் கணவருமான நிக் ஜோனஸ் தனது தந்தைக்கு வாழ்த்து கூறியதோடு, ப்ரியங்கா சோப்ராவின் தந்தையையும் நினைவு கூர்ந்துள்ளார்.
தனது தந்தையைப் பற்றிய பதிவில், ''அனைத்து தந்தைகளுக்கும் வாழ்த்துகள். எனக்கு எப்போதும் எனது தந்தை தான் ஹீரோ. உங்களை மிஸ் செய்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மற்றொரு பதிவில், '' டாக்டர் அசோக் சோப்ரா, நான் உங்களை சந்தித்திருக்க வேண்டும். நீங்கள் சிறந்த மகளை வளர்த்துள்ளீர்கள். நாங்கள் இருவரும் எங்களை கண்டுகொண்டுள்ளோம். அதற்காக நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். தந்தைகளுடன் இல்லாமல் இருக்கும் அனைவரையும் நினைவு கூர்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
நிக் ஜோனஸின் இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.