தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெப் சீரிஸில் இணையும் பிரியங்கா - நிக் ஜோனஸ் தம்பதி - வெப் சீரிஸில் இணைந்த பிரியங்கா

டெல்லி: மண வாழ்க்கையில் இணைய தயாராக இருக்கும் ஜோடிகளின் காதல் கதை பற்றி விவரிக்கும் வெப் சீரிஸில் பிரியங்கா சோப்ரா, அவரது கணவர் நிக் ஜோனஸ் இணைந்துள்ளனர்.

Nick announces web-series with Priyanka
Priyanaka adn Nick Jonas

By

Published : Feb 7, 2020, 11:35 AM IST

நட்சத்திர தம்பதிகளான பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் முதல் முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

இதுபற்றி பாடகரும், பிரியங்கா சோப்ரா கணவருமான நிக் ஜோனஸ் தனது இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். அதில், அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகவிருக்கும் வெப் சீரிஸில் நானும், பிரயங்காவும் இணைந்து பணியாற்ற மிகவும் ஆர்வமாக உள்ளோம்.

எதிர்வரும் வசந்த காலம் அல்லது கோடை காலத்தில் நீங்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தால் உங்களின் காதல் கதையை கேட்க நாங்க தயாராக உள்ளோம். கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் உங்களது தகவல்களை அனுப்புங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவை வீடியோவாகவும் பதிவிட்டு இதனுடன் இணைத்துள்ளார் பாடகர் நிக். இதன்மூலம் முதல் முறையாக இந்த நட்சத்திர தம்பதிகள் ஒன்றாக இணைந்து வெப் சீரிஸ் நிகழ்ச்சி ஒன்றில் தோன்றவுள்ளனர்.

பிரியங்கா - நிக் ஜோனஸ் இருவரும் பொழுதுபோக்கு துறையில் இருந்தாலும் தங்களுக்கான பணிகளில் தனியொரு இடத்தை பிடித்திருப்பதுடன், தங்களுக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்துள்ளனர். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கோ தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.

இதையடுத்து இவரும், காதல் கணவர் நிக் ஜோனஸும் இணைந்து ஏதாவது படத்தில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது மண வாழ்க்கையில் இணையவிருக்கும் ஜோடிகளின் காதல் கதையை பற்றி பேசும் ரெமாண்டிக்கான நிகழ்ச்சியில் ஒன்றாக சேர்ந்து தோன்றவுள்ளனர்

ஏற்கனவே நிக் ஜோனஸின் சக்கர், வாட் ஏ மேன் கோட்டா டூ ஆகிய பாடல்களில் தோன்றினார் பிரியங்கா. இதன் பின்னர் தற்போது வெப் சீரிஸில் கணவர் நிக் ஜோனஸுடன் இணைந்து பங்கேற்கவுள்ளார். 2020ஆம் ஆண்டு திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகளின் காதல் கதை, அவர்கள் திருமணத்துக்காக திட்டமிட்டிருக்கும் புதுமைகள் குறித்து இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த வெப் சீரிஸ் படமாக்கப்படவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details