இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் என்ஜிகே. இப்படத்தில் சூர்யா மாறுபட்ட இருவேடங்களில் நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ஜிகே படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், ஜெகபதிபாபு, சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
'என்ஜிகே' அதகளம் பண்ணும் - புதிய அப்டேட்!
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'என்ஜிகே' படத்தின் சிங்கிள் டிராக் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாவதால் எதிர்பார்ப்பு பெருமளவு அதிகரித்துள்ளது.
என்ஜிகே
அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. மேலும், படத்தின் பணிகள் முடிந்து வருகின்ற மே 31ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் என்ஜிகே படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் சிங்கிள் டிராக் வரும் வெள்ளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் பாடல் பெயரை வெளியிட்டுள்ளனர்.
'தண்டல்காரன்' என்ற பாடல் ரசிகர்களை மகிழ்விக்க வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.