இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் என்.ஜி.கே. அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் என்ஜிகே படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குநர் செல்வராகவன் தான் படைக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வாழ்க்கையை அழகியலோடு சொல்பவர். எந்த ஒரு எதிர்மறையும் இல்லாமல் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்துள்ளார்.
'நந்தகோபாலன் குமரன் 31 ஆம் தேதி வரான்..!' - ரசிகர்கள் குதூகலம்! - செல்வராகவன்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'என்.ஜி.கே' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
அதேபோன்று என்ஜிகே படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு விவரிக்க முடியாத வார்த்தைகளால் நீண்டுகொண்டிருக்கிறது. படத்தின் டீசர் வெளியான நிமிடத்தில் இருந்தே இப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவலோடு லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஒரு நடிகனின் படத்திற்காக காத்திருப்பது புதிதல்ல. ஆனால், ஒரு இயக்குநரின் படைப்பை கண்டு ரசிக்க, விமர்சிக்க, பாராட்ட ரசிகர் பட்டாளமே படையெடுக்க காத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. காட்சி வடிவில் கவிதை படைக்கும் செல்வராகவன் சினிமாவின் காதலன்.
இந்நிலையில், என்ஜிகே திரைப்படம் வருகின்ற 31 ஆம் தேதி வெளியாக இருப்பதால் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் சூர்யாவின் கதாப்பாத்திரத்தின் பெயரை வெளியிட்டுள்ளனர். அதில், நந்தகோபாலன் குமரன் 31 ஆம் தேதி வரான் என்ற வரி இடம்பிடித்துள்ளது.