தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த செல்வா-யுவன் கூட்டணி - இயக்குநர் செல்வராகவன் யுவன்சங்கர் ராஜா

இயக்குநர் செல்வராகவனும், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவும் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரலையில் பதில் அளித்தனர்.

செல்வா-யுவன் கூட்டணி

By

Published : Apr 29, 2019, 4:41 PM IST

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் என்.ஜி.கே. முதல் முறையாக சூர்யா -செல்வராகவன் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள என்ஜிகே படத்தில் சூர்யா இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் மே 31ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. மேலும், செல்வராகவனின் திரைப்பயணத்தில் தவிர்க்க முடியாத நபர் யுவன்சங்கர் ராஜா. இவர்களது கூட்டணியில் வெளிவந்த அனைத்து பாடல்களும் பெரும் வெற்றியை பெற்றது. ரசிகர்களுக்கு பிடித்த காம்போ செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா

நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் என்ஜிகே படத்தில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் இப்படத்துக்காகவும், படத்தின் பாடல்களுக்காகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இல்லாமல் இவர்கள் இருவரும் முதன்முறையாக இணைந்துள்ளதால் பாடல் வரிகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலரிடத்தில் எழுந்துள்ளது. என்ஜிகே படத்தின் இசை மற்றும் டிரைலர் இன்று மாலை ஏழு மணிக்கு வெளியாகிறது.

இந்நிலையில், இயக்குநர் செல்வராகவனும், யுவன்ஷங்கர் ராஜாவும் ட்விட்டர் பக்கத்தில் நேரலையில் தோன்றி படம் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details