இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் என்.ஜி.கே. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
‘படத்தை உற்று கவனியுங்கள்... பல ரகசியங்கள் நிறைந்துள்ளது’ - செல்வராகவன் - சாய் பல்லவி
சூர்யா நடிப்பில் வெளியான 'என்ஜிகே' திரைப்படத்தைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் கருத்து ஒன்றை பதவிட்டுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், நேற்று (மே 31) திரைக்கு வந்தது. நேற்றில் இருந்தே இப்படம் குறித்து சமூகவலைதளங்களிலும் ரசிகர்களிடையேயும் கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கியது.
இந்நிலையில், செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என்.ஜி.கே. படத்துக்கான ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. நீங்கள் காட்டியுள்ள அன்பு, அற்புதமானது. சிலர் யூகித்ததைப் போல், ‘என்.ஜி.கே’ கதாபாத்திரத்தில் நிறைய அடுக்குகள், ரகசியங்கள் மறைந்துள்ளன. படத்தை உற்று நோக்கினால் அவற்றை கண்டறியலாம். குடும்பம் மற்றும் நண்பர்களோடு படத்தை ரசியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.