நடிகர் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் முதல் முறையாக இணைந்திருக்கும் இந்தப் படம் அரசியல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், உமா பத்மநாபன், இளவரசு, பொன்வண்ணன், பாலா சிங், தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி, குரு சோமசுந்தரம், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ள படத்துக்கு இசை - யுவன்ஷங்கர் ராஜா. ஒளிப்பதிவு - சிவகுமார் விஜயன். ஏற்கனவே படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.