தமிழில் நடிகர் ஆரி 'ரெட்டைச்சுழி', 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே' 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இதன்பின் 'பிக்பாஸ் சீசன் 4' நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.
'பகவான்' ஆரி வெளியிட்ட புதிய அப்டேட்! - பகவான் பட அப்டேட்
நடிகர் ஆரி நடிப்பில் உருவாகிவரும் பகவான் படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
aari
நடிகர் ஆரி தற்போது 'பகவான்', 'அலேகா', 'எல்லாம் மேல இருக்கறவன் பாத்துக்குவான்' போன்ற படங்களில் நடித்துவருகிறார்.
காளிங்கன் இயக்கும் பகவான் படத்தில் ஆரிக்கு ஜோடியாக பூஜிதா நடித்துள்ளார். தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி குறித்தான இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது செஞ்சி கோட்டையில் தொடங்கியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.