தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனாவில் இருந்து மீண்ட அமிதாப்... பொய் என அறிவிப்பு - கரோனாவில் இருந்து குணமடைந்தார் நடிகர் அமிதாப் பச்சன்

Amitabh Bachchan Tests Negative For Coronavirus
Amitabh Bachchan Tests Negative For Coronavirus

By

Published : Jul 23, 2020, 5:05 PM IST

Updated : Jul 23, 2020, 5:29 PM IST

16:55 July 23

கரோனாவில் இருந்து குணமடைந்த செய்தி தவறு. அறிவிப்பு வெளியிட்ட பிக்.பி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் தொற்றில் இருந்து குணமடைந்தார் என்று கூறப்பட்ட செய்தி தவறானது என நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தான் குணமாகியதாகக் கூறப்பட்ட செய்தி தவறு என்று குறிப்பிட்டுள்ளார். அதில், " இந்த செய்தி தவறானது, பொறுப்பற்றது, போலியானது, முற்றிலும் பொய்யானது" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாள்களாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமிதாப் பச்சன் குணமடைந்ததாக வந்த செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்ததைத் தொடர்ந்து அந்த செய்தி தவறு என்று அறிவிக்கப்பட்டது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Last Updated : Jul 23, 2020, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details