தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய் சேதுபதி மகன் நடித்திருக்கும் "தூவென்" பட டீசர் - 'தூவென்'

சேதுபதி படத்தில் விஜய் சேதுபதிக்கு மகனாக நடித்த ராகவன் நடித்துள்ள 'தூவென்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ராகவன்

By

Published : Mar 19, 2019, 7:08 PM IST

இயக்குநர் பல்லவ சுரேஷ் இயக்கியுள்ள படம் தூவென். திரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் சேதுபதி, பவர்பாண்டி, மாரி-2 ஆகிய படத்தில் நடித்த சிறுவன் ராகவன் கதாநாயகனாக நடித்துள்ளான். ஒரே இரவில் நடக்கும் இந்தக்கதையில் இரண்டு சிறுவர்களை வைத்து கதையே நகர்ந்து செல்கிறது. பேயிடம் மாட்டிக்கொண்டு இந்த இரண்டு சிறுவர்கள் தவிக்கும் திகில் நிறைந்த காட்சிகளில் படபடப்பும் பதற்றத்தையும் தருகிறது.

ஒருகட்டத்தில் பேயை வைத்து ராகவனும் இன்னொரு சிறுவனும் விளையாடுவார்கள் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது எனக் கூறினார். மேலும், தமிழ் சினிமாவில் சிறுவர்களை வைத்து படம் வருவது குறைந்துவிட்டன. இதுபோன்ற பேய் படங்களில் சிறுவர்களை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வைப்பது சுலபமான காரியமன்று.

தற்போது இந்த டீசர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details