கனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 2 படத்தின் பெயரை படக்குழுவினர் வெளியிட்டனர். பிளாக் சீப் குழுவினர் யூட்யூப் தளத்தில் பொழுதுபோக்கு நிகழச்சிகளை நடத்தி லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தனர். வெள்ளித்திரைக்கு கால்பதிக்க முயற்சித்து வந்தநிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படத்தை இயக்கும் வாய்ப்பு பிளாக்சீப் குழுவினருக்கு கிடைத்தது.
இப்படத்தை கார்த்திக் வேணுகோபால் இயக்கிவருகிறார். சின்னத்திரையில் மக்களை கவர்ந்த ரியோ கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். படத்தின் பெயரை வெளியிடாமல் எஸ்கே-2 என்ற பெயரில் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினர். மேலும், படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் பிளாக்சீப் குழுவினர் படத்தின் டைட்டிலை தேர்வுசெய்து அதற்கான ப்ரோமோ வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.