இயக்குநர் சக்ரி டோலெட்டி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்திருக்கும் ‘கொலையுதிர் காலம்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி, “கையெடுத்து கும்பிடணும் போல இருப்பவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கிறார்கள், கூப்பிடணும் போல இருப்பவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கிறார்கள்” என்றார். அவரது இந்த பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் தங்களது கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
ராதாரவிக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பதிலடி? - நயன்தாரா
சென்னை: நயன்தாராவின் ’ஐரா’ திரைப்படத்திலிருந்து வெளியாகி இருக்கும் வசனம் ராதாரவிக்கு பதிலடி கொடுப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நயன்தாரா நடித்திருக்கும் ‘ஐரா’ திரைப்படத்திலிருந்து 10 வினாடிகளுக்கு ஒரு காட்சி வெளியாகியிருக்கிறது. அதில், ஒருவர் நடிகை நயன்தாராவிடம் “நீ மீடியாலதானே இருக்க நாலு, அஞ்சு பேரோட இருக்காம இந்த பொசிஷனுக்கு வந்துருப்பியா?” என கேட்க அதற்கு நயன்தாரா, “உன்ன மாதிரி ஆளுங்களாலதான் ஃபேமிலிய சப்போர்ட் பண்ணனும்னு நினைக்கிற பொண்ணுங்க வெளியே போய் நிம்மதியா வேலை செய்ய முடியல” என பதிலளித்திருக்கிறார்.
நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராதாரவிக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பதாக லேடி சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.