நடிகர் சசிகுமார் - இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கொம்புவச்ச சிங்கம்டா. இந்தப் படத்தில், மறைந்த இயக்குநர் மகேந்திரன், மடோனா செபாஸ்டியன், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நகைச்சுவை கலந்த அதிரடி படமாக மதுரையை மையயமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்திருந்த சுந்தரபாண்டியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை 2020இல் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. இதனிடையே தற்போது படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.