மார்வெல் ஸ்டூடியோ தயாரிப்பில் நடாஷா ரோமனாஃப் நடிப்பில் அதிரடி ஆக்சன் காட்சியில் உருவாகி வரும் படம், 'பிளாக் விடோ'. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருந்தது. தற்போது புதிய ட்ரெய்லர் ஒன்றை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடாஷா ரோமனாஃப், 'என்னைப் பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியாது. அவெஞ்சர்ஸ் என் முதல் குடும்பமும் அல்ல என்கிறார். ட்ரெய்லர் முடிவில் இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும்' என அறிவித்துள்ளனர்.
'அவெஞ்சர்ஸ்' என் முதல் குடும்பம் அல்ல - 'பிளாக் விடோ' நடாஷா - தோர்
லேடீஸ் சூப்பர் ஹீரோவான நடாஷா ரோமனாஃப், ஸ்கார்லெட் ஜோஹான்சன் நடிப்பில் உருவாகி வரும் 'பிளாக் விடோ' படம் வெளியாகும் தேதி, தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'அயன் மேன்', 'கேப்டன் அமெரிக்கா', 'தோர்', 'ப்ளாக் பாந்தர்', 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்', 'கேப்டன் மார்வல்' ஆகிய மார்வெலின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு பெற்ற நிலையில் அந்த வரிசையில் 'ப்ளாக் விடோ' திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பைப் பெற்றது.
இந்தப் பாத்திரத்தில் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாரில்' ப்ளாக் விடோவாக நடித்த ஸ்கார்லெட் ஜோஹான்சன், ப்ளாக் விடோவிலும் நடித்திருக்கிறார். ப்ளாக் விடோவின் கதை கேப்டன் அமெரிக்காவின் சிவில் வாருக்குப் பின்பும், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாருக்கு முன்பும் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.