அறிமுக இயக்குனர் கிரிதரன் இயக்கத்தில், எஸ்.எஸ்.பிரபு, சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் பூஜை இன்று (டிச.4) போடப்பட்டது.
இப்படத்தில் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் ஜான் விஜய் நடிக்கிறார்.
கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள்.