'நமக்கு நாமே' குழு சார்பாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டமானது தயாரிப்பாளர் எஸ். விஜயசேகரன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சிறப்புக் கூட்டத்தில் விஜயசேகரன், எஸ்.டி.சுரேஷ்குமார், ராமச்சந்திரன் தயாளன், தங்கம் சேகர், திருப்பூர் செல்வராஜ், திருநெல்வேலி ஜெயக்குமார், அமல்ராஜ், தன சண்முகமணி, வெங்கடேஷ் துருவா என பல தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த நிர்வாகிகள் சரியாக செயல்படாத காரணத்தினால் அனைத்து தயாரிப்பாளர்களும் பல பிரச்னைகளை சந்தித்து வருவதால், அதற்கு தீர்வு காணும் விதமாக, இனிவரும் தேர்தலில் இதுவரை பதவி வகித்தவர்களைத் தவிர்த்து புதியவர்களை தலைமையில் அமர்த்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடத் தயாராகும் புதிய அணி கூடிய விரைவில் அனைத்து தயாரிப்பாளர்களையும் ஒருங்கிணைத்து ஆலோசித்த பிறகு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் புதிய அணியினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க...தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய இணையதளம் தொடக்கம்...!