தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

டான்ஸ் ஆடத் தயாரா? - வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் லேட்டஸ்ட் பாடல் - sivakumar sabatham movie updates

'சிவகுமாரின் சபதம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிவகுமாரின் சபதம்
சிவகுமாரின் சபதம்

By

Published : Jul 2, 2021, 3:44 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் எனப் பன்முகத் திறமைகொண்டவராக வலம்வருபவர் ஹிப் ஹாப் ஆதி.

இவரே தற்போது திரைக்கதை எழுதி, இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'சிவகுமாரின் சபதம்'. 'மீசைய முறுக்கு' படத்திற்குப் பிறகு ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள படம் இதுவாகும்.

சத்யஜோதி ஃபிலிம்ஸுடன் இணைந்து, இந்தப் படத்தை ஹிப் ஹாப் ஆதி தயாரித்துள்ளார். இந்நிலையில் 'சிவகுமாரின் சபதம்' படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான 'சிவகுமாரின் பொண்டாட்டி' பாடலை ஹிப் ஹாப் ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

'டான்ஸ் ஆடத் தயாராகுங்கள்' எனத் தலைப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள இந்தப் பாடல், குத்தாட்டம் போடும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். விரைவில் படத்தின் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:வைரலாகும் சிம்புவின் புதிய தோற்றம்!

ABOUT THE AUTHOR

...view details