சென்னை: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார்.
முதல் கட்டப் படப்பிடிப்பு
கிராமத்துப் பின்னணியில் நடக்கும் ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வந்தது.
இப்படத்திற்காக தனது உடலை முழுவதும் குறைத்து இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ளார், சிம்பு. இந்நிலையில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், சிம்புவின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.