தமிழ்த் திரைத்துறையில் ஆண்டொன்றுக்கு 200-க்கும் மேற்பட்ட படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் அனைத்துப் படங்களும் திரையரங்குகளில் வெளியாகின்றனவா? என்றால் அது கேள்விக்குறிதான். தயாரிப்பாளர்கள் பல கோடி ரூபாய் செலவுசெய்து படத்தைத் தயாரித்தும், போதிய வரவேற்பு கிடைக்காததால், வேதனையடைகின்றனர்.
அவர்களுக்காகவே புதிய முயற்சியாக, ஆன்வீ டிஜிட்டல் மல்டிஃபிளக்ஸ் என்ற டிஜிட்டல் களம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் குறும்படங்கள், வலைத்தொடர்கள், திரைக்கு வராத படங்கள், திரையரங்கு கிடைக்காத படங்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான படங்களும் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.