தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிவகார்த்திகேயனுக்கு புதிய நெருக்கடி! - தேர்தல் அதிகாரி

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல், தேர்தலில் வாக்களித்து சிவகார்த்திகேயன் புதிய நெருக்கடியில் சிக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு புதிய நெருக்கடி!

By

Published : Apr 28, 2019, 10:30 PM IST

தனது அசத்தலான காமெடி கலாட்டாக்கள் மூலம் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாதவறாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடந்து முடிந்த மக்களவைப் பொதுத்தேர்தலில், வாக்களிக்கச் சென்ற சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத காரணத்தால், அவர் வாக்களிக்க முடியாமல் போனதாக செய்திகள் பரவின.

ஆனால் வாக்களித்தற்கான புகைப்படத்தை சிவகார்த்திகேயன் இணையத்தில் வெளியிட்டார். இதிலிருந்து சர்ச்சை அவரை தொற்றிக் கொண்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் அவரால் எப்படி வாக்களிக்க முடிந்தது என்று தேர்தல் ஆணையம் சிவகார்த்திகேயனுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் அவரை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகளிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த விசாரணை முடிவில்தான், யார் மீது தவறு என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details