தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘உங்கள் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தாதீர்கள்’ - சனம் ஷெட்டி - சனம் ஷெட்டி

நடிகையும் பிக் பாஸின் போட்டியாளருமான சனம் ஷெட்டி சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

sanam shetty

By

Published : Sep 30, 2019, 11:36 PM IST

தமிழில் 'அம்புலி', 'கதம் கதம்', 'சவாரி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சனம் ஷெட்டி. 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் பிரபலமானவர். இதனால் சமூக வலைத்தளத்தில் அவரை பின்பற்றும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகமானது.

சனம் ஷெட்டி இன்ஸ்டா

இந்நிலையில், தற்போது சனம் ஷெட்டி தனது வலைதளப்பக்கத்தில் மருத்துவமனை பெட்டில் படுத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் கூறியதாவது, டியூமர் பற்றி சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. ஆனால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது அதனால் சர்ஜரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன்.

நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால் உங்கள் ஆரேக்கியம், உடல் நிலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியப்படுத்தாதீர்கள். எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் நண்பர்களே என்று பதிவிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் அவரது தாயாரும் அருகில் உள்ளார். இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலையே ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 'இந்தியன் 2' வில் 'வெள்ளைப் பூக்கள்' விவேக் கதாபாத்திரம் இதுவா...!

ABOUT THE AUTHOR

...view details